பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ri

றேன்” என்றாள். உடனே தோழி, யானைக் கன்றுகள், தம் இளமைப் பருவத்தில், தாம் வாழும் காட்டில் வாழ்பவராய குறவர்களின் குழந்தைகளோடு ஆடி மகிழ்வதையும், ஆண்டு சில கழிற்த பின்னர், அன்று குறச்சிறுவர்களோடு ஆடி மகிழ்ந்த அதே யானைக் கன்றுகள், வளர்ந்து பெரியவாகி விடவே, அச்சிறுவர்கள் காத்து நிற்கும் திணைப்புனத்துள் புகுந்து, தினகளைப் பாழாக்குவதையும், தம் இளமைப் பருவத்து இனிய தோழராய் விளங்கிய யாக்னகள், இன்று தம்புனத்துள் புகுந்து கேடு செய்வதைக் காணும் கிறுவர்கள் கவண்கல் எறிந்து அடித்து விரட்டுவதையும் பெண்ணே! நான் பார்த்திருக்கிறேன்; நீ பார்த்துள்ளனயோ!” எனக் கேட்டாள். அப்பெண் “ஆம்” எனத் தளயாட்டினள். உடனே தொடர்ந்தாள் தோழி. பெண்ணே! இந்த யானைக் கன்றுகள், பிறிதொரு காலத்தில் தாம் காக்கும் திணைப்புனத் துட் புகுந்து பாழ் செய்யும் எனக் குறச் சிறுவர்கள், விளே யாடும் சிறு பருவத்தில் அறிந்திருப்பாராயின், அன்று அவற். ருேடு ஆடி, அவற்றிற்கு மகிழ்ச்சி அளித்திருப்பார்களா. அதை உணர்ந்துகொள்ளும் அறிவுத் திறம், அன்று அவர்கள் பால் இல்லை. அதனல், அவற்றாேடு ஆடி மகிழ்ந்தார்கள். இன்று அவை தமக்கு அழிவு தருகின்றன. அது கண்டி அவர்கள், கவண்கல் எறிந்தும், எரிகொள்ளி விகியும் அவற்றை விரட்டுகின்றனர்: “அன்று நம்மோடு ஆடி மகிழ்ந்த யானைகள் இவை இவற்றை அடித்து ஒட்டுவதா? கூடாது: இப்போதும் அவற்றாேடு ஆடி மகிழ்வோம்; மகிழ்ச்கி கெடாவகையில், வேண்டுமளவு திவிேக்கதிர்களைத் தின்னம் டும் என எண்ணி அடித்து விரட்டாது விடுவதில்லை. பெண்ணே! குறக்குலச் சிறுவர்கள் பால் கானலtrம் இப் பேரறிவு, நாகரிக வளம் மிக்க நகர மக்கள் பால் அமையவில்லையே! அவ்வறிவு உன்பாலும் அமையவில்லை போலும். காதலர், அன்று நம்மோடு கூடி ஆடி மகிழ்நதார்; அது, குறச்சிறுவர்களோடு யாக்னக்கன்று ஆடி மகிழ்ந்ததை ஒக்கும்: இன்று பிரிந்து போய் தமக்குத் துயர் தருகிறர் யானைக் காறுகள் வளர்மது பெரிய