பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3

கருதுதல் கூடாது; துயர் மிகுதியால் கலங்கியிருக்கும் அப்பெண்ணைத் தேற்ற, அப்போது, சிறிதாவது வன்சொல் வழங்கவேண்டும் எனக் கருதியதால் அவ்வாறு கூறினள். என்றாலும், குறவர் செயலை அறம் என அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது, அக் குறவர்களைக் குறிக்க அவள் வழங்கிய குறியிறைப் புதல்வர் என்ற தொடரால் இனிது விளங்கும். பேரறிவு உடையார்க்கு முன் கைகள் மிக நீண்டி ருக்கும். ஆனல் அவள் காட்டும் குறவர்க்கு, முன் கைகள் குறுகியுள்ளன; அதனால் அக்குறவர், குறுகிய அறிவுடையர்; அவர் செயல் ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று என்பதைக் குறிப்பால் உணர்த்தினுள் என்க.

யான் சினந்தால் நீ என்னுகுவை:

தோழி கருதிச் செய்தது பயன் தரத் தொடங்கிவிட்டது: காதலளுேடு அன்று நாம் கொண்ட நட்பு, இன்று பகை யாகிவிட்டது. அவன் நட்புக் கோடற்குரிய நல்லவனல்லன்’ எனத் தோழி கூறக் கேட்டாள் அப்பெண். அவள் ஒரு நல்ல பெண்மணி. கணவனுக்கு ஏற்ற காரிகை. ‘தகை சான்ற சொல்காத்துச் சோரி விலாள் பெண்’ என்ற திருவள்ளுவரி பாராட்டைத் தன்க்கே உரிய தனி உடைமையாக்கிக்கொண் டவள். தன்னையும் தன் காதலனேயும் இவ்வுலகம் புகழ்ந்து பாராட்டவேண்டும் என விரும்பி, அப்புகழ் கெடாது காத்தலைத் தன் தலையாய கடமையாகக் கொண்டவள். தன்னைப் பழித்துரைப்பதை, ஒருவாறு தாங்கிக் கொள்ளி னும், தன் காதலனைப் பழிப்பதைத் தாங்கிக்கொள்ளாது அவள் உள்ளம். அதனல், தன் காதலனைத், தன் முன், தான் கேட்கத், தோழி பழிக்கக் கேட்டதும், அவள் துன்பம் அவளை விட்டு அகன்றது. அதற்கு மாருகத், தன் காத லனைப் பழித்த தோழி மீது கடுஞ்சினம் மூண்டது, “பிறர் பழி கூறுமளவு பண்பு கெட்டவரல்லர் என் காதலர்; அவ் வாறே, அவர் பழியுடையர் என்பது ஏற்றுக் கொள்ளப் பெறினும், என் காதலரை பழி கூற இவள் யார்?’ என எண் ணங்கள் அலை அலையாக எழுந்தன அவள் உள்ளத்தில்,