பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-@, என்னுகுவைகொல் கன்னுதல் நீயே” .

அழுதேன் அறியாமையாள் :

குணம் என்னும் குன்றேறி நின்றவள் அப்பென் அதஞல், தோழியால் கொண்ட அச்சினம் அப்போதே மறைந்துவிட்டது. தன் காதலனைப் பழித்தாள் என்ற மையால் கடுஞ்சினம் கொண்ட அவன், அச்சினம் கிறிது ஆறியதும் சிந்திக்கத் தொடங்கினுள். என்மீது அன்புடிை யவள் தோழி, என் நலத்தில் நாட்டம் உடையவள். அதஞல், என் துயரைக் காணல் அவளால் இயலாது போயிற்று. அதனால் அதற்குக் காரணமாய காதலனைக் கடிந்துகொண்டாள். அவள் என் துன்ப நிலையக் கன்டில ளேல், காதலனை அவ்வாறு பழித்திராள். அதைக் கண்டு விட்டாள்; அவன் கொடுமையைப் பழித்தாள். ஆகவே அவனைப் பழிக்குமாறு அவளைத் துரண்டியது என் துயர் நிேைய; அவள் காணுமாறு நான் துயருற்றிருத்தல் கூடாது. காதலன் கொடுமையே புரிந்திருப்பினும், அதைப் பிறர் அறியாவாறு தாங்கிக்கொண்டிருத்தல் வேண்டும்; அதில் நான் தவறிவிட்டேன்; தவறு என்னுடையதே. அதை அறியாது அவளைச் சினப்பதில் பயன் இல்.ை ஆகவே, காதலனேக் கொடுமையுடையவனுகக்கொண்டு வருந்தியதும், அதனுல் அவனேக் கடித்துரைத்த அவளைச் சினந்ததும் என் அறியாமையே என்பதை அவளுக்கு அறிவித்தல் வேண்டும்; காதலன் கொடியவன். அல்லன்; நிசம்பவும் நல்லவன்; அதை அறிந்துகொள்ளாதது என் அறிவின் பிழை என உரைத்துக் காதலன் மீது ஏற்றிய குற்றத்தையும் மறைத்து அவ்ன் பால் மன்னிப்பும் பெறுதல் வேண்டும்’ என்பது அவள் கித்தனே யின் முடிவாயிற்று. . - -

குறுந்தொகை 96. அள்ளுர் நன்முல்யைார். நாடற்கு-நாடன் செய்யும் கொடுமைக்கு என் செய்கோ. என்ன செய்வேன்; என்றி-என்று சொல்விப் பழிக்கின்றும்.