பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கல்லினும் வலியன் தோழி! - வலியன் என்னது, மெலியும் என் நெஞ்சு” .

தன் துயர் நிலையைத் தாய் அறிந்தால், தன் திருமணத் திற்கு விரைவள்; அது வேற்று வரைவிற்கு வழி செய்யும்; தோழி அறிந்தால் காதலனைக் கடிந்துரைப்பள்; அது அவன் புகழிற்குக் கேடாம்; ஊரார் உணர்ந்தால் அலர் கூறித் துாற் றுவர்; அது தன் ஒழுக்கத்திற்கு இழுக்காம் என்ற எண்ணம் எழுந்தமையால், காதன்ை விரைந்து வந்திலனே என்ற ஏக் கத்தால் தன் இதயத்தில் எழுந்த வருத்தத்தைப் பிறர் எவரும் அறியாவாறு, அகத்துள்ளே அடக்கிக் கொண்டு, அவன் வருகையை ஆர்வத்தோடு எதிர் நோக்கிக் கிடந்தாள் அப்பென்.

அவிழ்த்தற்கு அரிது அவர் நட்பு :

காதலன் வந்து கடிமணம் செய்துகொள்ளும் வரை, அகத்து எழுதுயரைப் பிறர் அறியாவாறு மறைத்துக் கொள்ள வேண்டும் என்னும் உறுதி பூண்ட அப்பெண், அதற்காக எவரோடும் எதுவும் பேசாது வாய்மூடிக்கிடப் பின், அதுவே தன் துயரைக் காட்டிவிடுமோ, அதுகாணும் தோழி, தனக்கு அறிவுரை கூறவும், துயர்க்குக் காரணமான காதலனைப் பழிக்கவும் நேருமோ என்று அஞ்சிள்ை. அதனல் விரைந்து வந்து வரைந்துகொள்ளாமையால் காதலன்மீது வருத்தம் இருக்கவும், அதை மறைத்துக்கொண்டு, அவனையும் அவன் நட்பையும் வாயாரப் புகழ்ந்துகொண்டேயிருக்க வேண்டும்; அது, தன் அகத்துயரைப் பிறர் அறியாவாறு மறைக்கத் துணைபுரியும்; தோழியின் வாயும் அடங்கும் என்று

குறுந்தொகை 1 187. கபிலர்.

செவ்வரை-செங்குத்தான மலைச்சாரல்; சேக்கை-இடமா கக்கொண்டுவாழும்; மறி-குட்டி, சுரை.தாய் மடி, ஆர. நிறைய; மாந்தி-குடித்து உகளும்-துள்ளி விளையாடும்; கல் மலை; வலியன்-உறுதிப்பாடு உடையன்,