பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rs

கருதிகுள் அதருல் தோழியை அருகில் அழைத்து, .ழிi யானும் அவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு விட்டோம்: காதல், எங்கள் இருவரையும் நன்முகப் பிணத்துவிட்டது; அவ்வன்புத் தளையைக் கட்டவிழ்த்து விடுவது, இனி எவர்” லும் ஆகாது. பிரிவின்றி ஒன்றுபட்டுவிட்டது எம் காதல். இந்நிலையில் நாங்களே விரும்பினும் அப்பிணைப்பிலிருந்து விடுபட்டு வெளியேறுவது ஆகாது. ஆகவே, பொருள் தேடிப் போயிருக்கும் அவர் வந்து மணப்பது உறுதி; அவர் எவ்வளவுதான் உயர்ந்த நிலையில் வாழ்பவராயினும், நம் மால் அணுகலாகா உயர் வாழ்வுடையராயினும், நம் காதல் இன்பத்தை நுகர நம் வீடு தேடி வந்தேயாதல் வேண்டும்; வந்து நம்மை வரைந்துகொண்டு. வம்ருப் புகழ் மணத்தைப் பாரெங்கும் பரப்பும் பெருமை வாய்ந்த இல்லற நல்வாழ்வை மேற்கொள்ள வேண்டும்; இது தவருது. அவர்க்கு அவ்வுள் ளம் உண்டு. ஏற்றுச் சென்றுள்ள கடமையுணர்வால் அதை சிறிதே மறப்பினும், அவர் நாட்டு இயற்கைக் காட்சிகள், அதை அவர்க்கு நினைப்பூட்டிவிடும் தோழி! காக்கையினத்தில் சிறந்தது என்று கருதப்படும் வென் காக்கை, பெரிய கடற் பரப்பில் வாழும் பெருமையுடைதே எனினும், அது, தனக்கு வேண்டிய உணவைப் பெற, கரிய நீர் நிறைந்து வழி யும் உப்பங் கழியையே தேடிச் செல்லும். ஆங்கு இரை உன்டு முடிந்ததும் கழிக்கருகே யிருக்கும், மலர் மணம் கமழும் மலர்ச் சோலைக்கே சென்று உறங்கும். அக்காக்கை யின் வாழிடமாகிய அக்கடற்கரைக்கு அணித்தாகவே நம் காதலன் ஊர் உளது. ஆதலின், அவ்வெண்காக்கையின் வாழ்க்கை முறைகளை, அவர் நாள்தோறும் காண்பர். காணும் அவர்க்குத் தம் வாழ்க்கை முறையினையும் அவ்வழி பில் வகுத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வுதோன்றும். அவ்வுணர்வு அவர் உள்ளத்தைவிட்டு ஒரு சிறுபொழுதும் அகலாது. ஆகவே, வரைவு முயற்சியில் விரையும் அவ்வுள் ளம். ஆகவே, வந்து வரைவாரோ? வாராதே நின்றுவிடு வரோ என்ற ஐயம் எனக்கு இல்லை. ஆகவே நான் வரும் தேன்” என்று கூறினுள்,