பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

si

வந்தன எல்லாம் கூறுவர். அவர்கள் எதுவேண்டுமானலும் கூறிக்கொள்ளட்டுமே; அதனல் நமக்கென்ன? அறிவிலாதார் கூறுவது கேட்டு நான்சிறிதும் கலங்கேன்” என்று கூறி, அவர்கள் வாயையும் அடக்கிவிட்டதாக எண்ணி ஆறுதல் அடைந்தாள்:

“பலரும் கூறுக அஃது அறியாதோரே!

அருவி தந்த நாட்குரல் எருவை கயம் நாடு யானை கவளம் மாந்தும் மலை கெழு நாடன் கேண்மை தலைபோகாமை நற்கு அறிந்தனென் யானே.” 2

பாக! காதலி ஊர் காட்டின் கண்ணது; கடிதின் ஒட்டு தேரை :

இவள் நிலை இதுவாயின் பொருள் தேடிப்போன அவன் நிலை யாது? அவன் எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணியதைலின், விரும்பிவந்த பெரும் பொருளை விரைவில் சேர்த்துவிட்டான். பெரும் பொருள் ஈட்டவேண்டும்; அதை யும் குறித்த காலத்திற்குள் விரைந்து ஈட்டவேண்டும் என்ற எண்ணமே இடைவிடாது ஊக்க, அதுவே கருத்தாய்ச் செயல் புரிந்துகொண்டிருந்தமையால், அதுகாறும் மறைந் திருந்த காதல் உணர்வு, கருதிவந்த காரியம் கைகூடிய வுடனே, உள்ளத்தில் ஊற்றெடுத்துப் பெருகிற்று. அதனல் விரைந்து வீடடைந்து, காதலியைக் கண்டு களிக்கவேண்டும்

a குறுந்தொகை 170. கருவூர்கிழார்.

தந்த-அடித்துவந்த நாள் குரல்-காலத்தில் விளைந்த; குரல்-கொத்து: எருவை-கொறுக்காந்தட்டை (நாணல் தண்டு) கயம்-ஆழம் மிக்க நீர்நிலை; நாடி-தேடிச்செல்லும்; கவளம்-உணவாக மாந்தும்.உண்ணும்; கெழு.பொருந்திய, தேைபாகாமை-அழியாமை நற்கு-நன்கு.