பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச்

எனும் வேட்கை அவனேப் பிடரிபிடித்து விரட்டிநீறு. அதனல், விரைந்து ஒடவல்ல குதிரைகள் பூட்டிய தன் தேரில், தன் கருத்தறிந்து ஒட்டவல்ல பாகன் செலுத்த ஏறி ஊர்நோக்கிப் புறப்பட்டான். -

குதிரைகள் காற்றெனப் பறந்து ஓடிக்கொண்டிருந்தன, இயல்பாகவே விரைந்தோடும் அவற்றைப் பாகன் மேலும் முடுக்கிக்கொண்டிருந்தான். அதனல் அவை தம் ஆற்ற லினும் அதிகமாக விரைந்துகொண்டிருந்தன. தேரில் அமைந்திருப்போன் உள்ளம் ஆங்கில்லை; அது, அக்குதிரை களினும் விரைந்து ஓடி, அவன் காதலி வாழும் ஊரை அடைந்து, அவள் மனேயின் உட்புகுந்து, அவளே வலம் வரத் தொடங்கிவிட்டது. அவள் ஊர், கொன்றை மரங்கள் மலிந்த குறுங்காட்டின் நடுவே இருந்தது. அவலேக் கிழங் கிற்காக முல்லே நிலத்து மக்கள் தோண்டிய குழிகளில், பொன்னிறக் கொன்றை மலர்கள் உதிர்ந்து நிறைந்திருக்க அன்று கண்ட அக்காட்டின் காட்சி, அவன் கண்முன் வந்து நின்றது. வாணிகம் புரிந்து வளம்பெற்று வருபவன் அவன்; தான் கொண்டு சென்ற பண்டங்களை விற்று, அவற்றிற்கு விலையாகப் பெற்ற பொற்காசுகள் நிறைந்த பெட்டிகள் பல அவன் பால் இருந்தன. அப்பெட்டிகளைப் பல முறை திறந்து திறந்து மூடிய அவன் கண்முன், காதலியின் காட்டு நாட்டில் கொன்றைமலர் நிறைந்த குழிகளின் காட்சி தோன்றியதும், அவனுக்கு அப் பணப்பெட்டிகள் நினைவிற்கு வந்தன. உடனே பெட்டியைத் திறந்தான்; அதனுள் நிறைந்திருக்கும் பொற்காசுகளைக் கண்டான்; ‘என் காதலியின் மணத்திற்கு ஆகும் மாண்புடையவை இக்காசுகள்’ என அவற்றைப் பாராட்டினன். தான் பாராட்டியதோடு நின்றானல்லன். பெட்டிகளையும், பெட்டிகள் நிறையக் கிடக்கும் பொற்காக களையும் தேர்ப்பாகனுக்குக் காட்டின்ை; அப்பொற்காககள் அவனுக்கு அளிக்கவிருக்கும் மண நிகழ்ச்சியை எடுத்துக் கூறினன். கூறிப், “பாக பொற்காக மலிந்த இப்பெட்டி கன்யோல் தோன்றுமாறு, கவலைக் கிழங்கு அகழ்ந்த குழிகள்