பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

வரைகோள் அறியாச் சொன்றி: கிரைகோல் குறுந்தொடி தந்தை ஊரே .

அவன் அன்பு, இன்றும் என்றும் ஒன்றே : -

பொருளிட்டும் கடமை முடிந்த பின்னரும், இளைஞன், திருமண முயற்சியை விரைந்து மேற்கொண்டிலன். தன் காதல் உறவைத் தன் பெற்றாேர்க்கும், தன்னுார்ப் பெரியோர்க்கும் அறிவித்து, அவரை மண முயற்சி மேற் கொள்ளச் செய்வதில் சிறிது காலம் கழிந்தது. அதற்கிடை யில் அப்பெண்ணின் மனையில், நிகழ்ச்சிகள் வேறு வடிவம் எடுக்கத் தொடங்கின.

பெண்ணைப் பெற்றவர்கள் தம் பெண் மணப் பருவம் அடைந்தமை கண்டு, அவளுக்கு மணம் செய்து வைக்க விரைந்தனர். அவள் பெருமையும், அவள் பிறந்த குடிப் பெருமையும் அவளை மணக்க வருமாறு வேறு சிலரையும் தூண்டின. அவர்களுள் சிலர், அவள் மனே புகுந்து மணம் பேசினர்; அவள் பெற்றாேர் அவள் காதலை அறியார் ஆதலா லும், அவள் காதலன் மண முயற்சி மேற்கொண்டு முன் வந்திலன் ஆதலாலும், அவளைப் பெற்றவர்கள், மணம் பேசி வந்தாருள், தகுதியுடையான் எனத் தாம் மதித்த ஒருவனுக்கு அவளை மணம் செய்து தர இசையும் ஒரு நிலை ஏற்பட்டு விட்டது. அஃதறிந்தாள் தோழி. அவர் அவ்வாறே இசைந்து விடுவரோ என எண்ணினுள்; நடுங்கிற்று அவள் உள்ளம்; அந்நி ைவாய்த்துவிடின், இவள்

குறுந்தொகை : 233, பேயஞர்.

கவலை-வள்ளிக் கிழங்கு போலும் ஒரு வகைக் கிழங்கு; கெண்டிய - அகழ்ந்த, ஒள்வி.பொன் போல் ஒளி வீசும் மலர்; தாஅய் - பரவி, பொன் பெய் பேழை - பொற்காககளைப் போட்டுவைக்கும் பெட்டி- மூய் - மூடி, புறவு - குறுங்காடு; உயர்ந்தோர் - இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழிலும் வல்ல பெரியோர், மிச்சில் - மிகுதி, வரைகோள் - தடிை செய்தன; சொன்றி சோறு, -