பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

காதல் என்னும் கற்பு என்னும் இவன் உயிர்தான் என்னும் என எண்ணி எண்ணி அஞ்சிளுள். உடனே விரைந்து ஒடி அப்பெண்ணைக் கண்டு மனேயில் நிகழ்வன கூறி மனம் கலங்கிளுள்.

தோழி கலங்கிளுள்: ஆளுல் தோழி கூறிய செய்தி கேட்ட ஆப்பெண் சிறிதும் கலங்கவில்லை. திருமணம் தனக்கு தான் இல்லாதவிடத்தில் தனக்குத் திருமணம் நிகழ்வது, இயலாது. தான் ஒருவன்பால் அன்புகொண்ட பின்னர்த் தன்னைப் பிறர் மணக்க வருவதோ தன் பெற்றாேர் தன்னைப் பிறர்க்கு மணம் செய்து தருவதோ இயலாது என உறுதி யாக நம்பியதால், அப்படியும் நிகழ்ந்துவிடுமோ என நினைத் துப் பார்க்கவும் மறுத்தது அவள் உள்ளம். மேலும், காதலன் அன்பு நிலையானது. அதை அழித்தல் எவராலும் ஆகாது; அது அழிய அவன் பார்த்திரான், அதை அழிக்க முற்படு வாரை அவன் அழித்து ஒழிப்பன் அவன் அத்தகையளுத வின், தன்னே மணக்கும் கருத்துடையராய்ப் புதியோர் எத் தன Gluff வரினும் கவலையில்லை; அவர்கள், தன்னை அணுகா வாறு, அனைவரையும் விரட்டித் தன்னைத் தனக்கே உரிய ளாக்கிக்கொள்வன்; அவன்பால் அன்று கண்ட இவ்வன்பும், உறுதிப்பாடும் இன்றும் அவ்வாறே உள என்று எண்ணி இறுமாந்தது அவள் உள்ளம். அதனல் தோழி கூறியன. கேட்டு நிலைகுலைந்து நடுங்குவதற்கு மாருக நகைக்கத் தொடங்கிள்ை. ...

தோழி! நீ கூறிய செய்தி, கேட்டு நடுங்குதற்கு உரிய தன்று. நகைத்தற்கு உரித்து’ எனத் தொடங்கிப், பின்னர்க் காதலன் தன்னை மணக்க வருவாரையெல்லாம் விரட்டித் தானே மணந்துகொள்வன் என்பதை அவளுக்கு உணர்த்த விரும்பிளுள், விரும்பியவள் அதை வெளிப்படைச் சொற் களால் விளங்க உரைக்காது, அவன் நாட்டின் மீது ஏற்றிக் கூற விரும்பினள். அதல்ை, ‘தோழி! நம் காதலர்க்குரிய காட்டு நாட்டின் இயல்பிகின நீ அறிவையோ? அவர் நாட்டுக் கானவர்க்குப் பலாக் கணி என்றால் பெரு விருப்பம்; அதனுல் அவர்கள் பலா மரங்களை நிறைய வைத்துப் பேணி வளர்ப்

கு