பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர். அரும் பாடுபட்டு வளர்க்கும் தம் பலா மரங்கள் நன்கு பழுத்து நிறைபயன் அளி கும் பருவத்தை எதிர்நோககிக் காத்துக் கிடப்பர். அந்நிலையில், அக்கனியிடத்தே ஆசை கொண்ட குரங்குக் கூட்டமும் பலா மரங்களே அணுகும். அது காணும் கானவர் தம் வில்லை வளைத்துத் தப்பாது பாய வல்ல கணைகளை எய்யக் கையில் எடுப்பர். கானவர் கணே யெடுப்பக் கண்டவுடனே குரங்குகளுக்குக் குலை நடுக்கம் உண்டாம்; போர்க் குதிரைகள்போல் விரைந்து ஓடி, அருகே வளர்ந்திருக்கும் மூங்கில் பு தருள், அம் மூங்கில்கள் ஒடிந்து பாழாகுமாறு பாய்ந்து மறையும். பலாக கனியைக் கானவர் தாமே உண்டு மகிழ்வர். அத்தகைய கானவர்மலிந்த நாடு நம் காதலர்க்குரிய மலைநாடு’ என அவன் மலைநாட்டு மாண்பின. கூறுவாள்போல், தோழி! தங்கள தோட்டத்துப் பலாக் கனியைக் குரங்குகள் கொண்டுபோகவிடாது தாமே உண்டு மகிழும் மக்கள் மலிந்த மலை நாட்டிற்குரிய நம் காதலர் மட்டும், தாம் காதலித்த என்னை, தம் வாழ்க்கைத் துணை யாக வரைந்து கொள்ள வேண்டிய என்னை, பிறர் வரைந்துகொள்ள விடுவரோ? விடார்; இது முக்கா லும் உறுதி’ எனத் தன் உள்ள உறுதியை மெலல வெளிப் படுத்தினுள். இறுதியாகத, தோழி பெண்ணேப் பெற்றாேர், தாமே லியவந்து தருக என எதிர்நோக்கி, அவர் இதுகா றும் வாளா இருக்கின் ருர். வரைவுக் கருததோடு பிறரும் வருகின்றனர் என அறிந்தால், இனி வாளா இரார் வரு வாரை விரட்டித் தாமே வரைந்து கொள்ள விரைவில்வருவர். அவர் அ ைபும் ஆற்றலும் அறியாது வந்த அவர்களும அவர் களோடு பணப் பேச்சுப் டே சும் நம பெற்றாேரும் நகைத்தற் குரியரல்லது சினத்தற்குரியரோ தோழி! நீயே கூறு’ எனக் கூறி அவளைத் தேற்றிள்ை. .

  • பலவில் சேர்ந்த பழம்.ஆர் இனக்கலை

சிலைவில் கானவன் செந்தொடை வெiஇச் செருவுறு குதிரையின் பொங்கிச், சாரல் இருவெதிர் டேமை தயங்கப் பாயும்