பக்கம்:குறும்பா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

17




ஒருவருக்கும் தெரியாதென்றான் முத்தன்
ஊர்ப்பொருளுக்கு உரிமைகொண்டான் எத்தன்.
கருவயிற்றை மறைப்பதுண்டா?
கழிவு நீரை நிறுத்தலுண்டா?
நெருப்பைப் பஞ்சால் மூடுகின்றான் பித்தன்!

O

பணத்தினையே மிதமிஞ்சிச் சேர்த்தான்
பலருழைப்பைப், பலகுடியைத் தீர்த்தான்;
தணல்புரட்சி நாட்டில்எழத்
தாழ்ந்தவர்கள் மேலுயரப்
பிணமாகத் தன்னினத்தைப் பார்த்தான்!

O

பூமாலை கையில்கொண்ட குரங்கு
போன்றதிந்த நாட்டாட்சி அரங்கு.
ஏமாந்த மக்களிடை
இறுமாப்புக் கள்ளருந்தி
ஏற்றதுபார், ஊழல்எனும் சிரங்கு!

O

பழந்தமிழே ஒரு சிலரின் பண்டம்
பதவுரைகள் இல்லாவிடில் மூண்டம்:
இழந்தகாதல் மீட்பதுபோல்
எய்துகிற பட்டத்திற்கே

தொழுது போற்றி அடகு வைக்கும். தண்டம்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/20&oldid=1199655" இலிருந்து மீள்விக்கப்பட்டது