பக்கம்:குறும்பா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கோவேந்தன்




வாழ்க்கை ஓர் ஆழி என்றான் நம்பி.
மகிழ்ந்து காதல் ஒடம்விட்டான் தம்பி;
சூழும் சாதிப் புயல்வீசப்
பொருளியலாம் சுறாதுரத்த
மூழ்கிவிட்டான் அந்தோஅவன் வெம்பி!

o

வீணையடி நீ எனக்கே என்றான்.
மெல்லியலை மீட்டி இதழ் தின்றான்;
வீணைக்குடம் இடித்தவுடன்
வீணடிநீ என்று சொல்லி
நாணிலி, வேறு ஒருத்திபின்பு சென்றான்!

o

தப்பான அரசியற்கே தாழ்ந்தான்
தன்னலத்தின் சுரண்டலிலே வாழ்ந்தான்;
வைப்பாட்டியை வாழவைத்தான்,
கைப்பிடித்த மனைவி விட்டான்,
இப்போது அவன் நோய்க்கடலில் வீழ்ந்தான்!

o

திறக்க முடியாது என்றார் கற்புக் கதவை
செந்தீ என்றார்,செந்தேள் என்றார் உறவை:
அறம் அழிக்கும் ஆட்சியினர்
அரக்க மன ஊழலாரின்

உறவுக்காரி பகலிலேதான் விதவை!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/21&oldid=1199659" இலிருந்து மீள்விக்கப்பட்டது