பக்கம்:குறும்பா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கோவேந்தன்

லகம் என்பது கலைக்களஞ்சியக் கொல்லை
உணர உணர விரியும் நமது எல்லை.
கலகக்காரர் சுரண்டல்காரர்
கண்னற்றதால் அறிவற்றதால்
விலகி அந்தோ வீழ்ந்துபட்டார் தொல்லை!

o

பாட்டெழுதிக் குவித்து விட்டான் மீசை
பசியிருந்தும் புகழின் மீதே ஆசை.
வீட்டுமகள் விரட்டிவிட்டாள்;
விரைந்துழைத்தான்; அறிவு வந்தது,
ஓட்டமிட்டாள் புகழேங்கியாம் வேசை!

o

கொடுத்தறியான், கொள்ளையடித்தான் கஞ்சன்
கொடுமைகளால் பொருள்குவித்தான் வஞ்சன்,
படுத்துவிட்டான் பணத்தைப் பார்த்தே
பறந்துவிட்டான் மருந்துண்ணாமல் -
இடுகாட்டில் தான்புகுந்தான் தஞ்சன்!

o

'எல்லாம் எனக்குத் தெரியும்' என்றாள் சிறுக்கி
‘என்னைவிடவா’ என்றெழுந்தாள் செருக்கி.
எல்லோருக்கும் எல்லாம் தெரியும்
எளிய உடைத் திரைப்படத்தாள்

செல்வோம்பட்டி மன்றுக்கென்றாள் தருக்கி!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/27&oldid=1199710" இலிருந்து மீள்விக்கப்பட்டது