பக்கம்:குறும்பா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

27

வாயளவில் முற்போக்குப் பேசி
வாழ்க்கையிலே நற்போக்கை ஏசி
வாய்ப்புக்கேங்கிப் பாய் விரித்து
வல்லாண்மை காட்டுகிற
தாய்நாட்டின் அரசியலோ சீசீ!

o

வள்ளுவரை வள்ளலாரைக் காட்டி
வாய்மை கூறிக் காந்தியாரைக் கூட்டி
கொள்ளை விழா எடுத்துயர்ந்த
கோமகனின் உளவு கண்டேன்
கள்ளப்பணம் வெள்ளேயாம்பே ரேட்டில்!

o

தாமரையின் மணம் நுகரச் சென்றேன்
தவளைகளே மொய்க்கக் கண்டு நின்றேன்
பூ மணமும் நுகரவில்லை,
மண்டுகட்கும் பயன் இல்லை,
தாமரையில் அழிந்ததடா செந்தேன்!

o

பிறந்தநாளை இறந்தநாளை வைத்து
பிதற்றுகின்ற பேச்சாளரை இணைத்து
துறப்பதற்கே அணியமாகத்
துடிப்பதைப் போல் விழா எடுத்தான்
சிறப்புடன் தான் விழாதிருக்க நினைத்து!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/30&oldid=1461748" இலிருந்து மீள்விக்கப்பட்டது