பக்கம்:குறும்பா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கோவேந்தன்

அமைதியாக எழுவதில்லை புரட்சி
அலைகடலே கொதித்தெழும் ஓர் எழுச்சி,
சுமை சுமையாய் ஏற்றிவைத்த
துயர் அழித்துப் பொதுவுடைமை
நமதிடையே மலரவைக்கும். கிளர்ச்சி.

o

வாய்ப்பில் வாழும் பச்சோந்திகள் கூட்டம்
வல்ல பணக்காரர்களின் கோட்டம்
நோய் அழிக்க வாள் எடுத்து
நொந்தவர்கள் கொதித் தெழுந்தால்
வாய் பிளந்தே எடுக்குமடா ஓட்டம்!

o

தங்கமான மாந்தர் என்றார் சிரித்தார்
தங்கப் பல்லைக் காட்டி இதழ் விரித்தார்.
இங்கு அமைச்சுச் செயலாளரின்
இனிய பொன் விழாவினன்று
தங்கப் பாளக் கள்ளர் என்று பிடித்தார்!

o

ஊழல் ஊழல் என்று சொல்லிப் பிரிந்தான்
ஊருலகின் நீதிக்காகத் திரிந்தான்;
ஊழலுக்கோர் ஆய்வமைத்தார்
ஊழல் குரல் எழுப்பியவன்
ஊழலுக்கே சுரங்கம் என்றார் மறைந்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/31&oldid=1461751" இலிருந்து மீள்விக்கப்பட்டது