பக்கம்:குறும்பா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

29


குடும்பத்திலும், கொள்கையிலும் சண்டை
குப்பத்திலே உடைந்தனவாம் மண்டை
நடுத்தெருவில் மன்றுகளில்
நல்ல தொழிற் சாலைகளில்
தொடுக்கும் சண்டை வைத்தாள்மது முண்டை!



எதிரிதன்னை வெல்வான் என்று அஞ்சி
இடுப்பொடிந்தான், மனம் ஒடிந்தான் செஞ்சி!
புதர் அசைந்தால் 'புலி புலி, ஆ
போந்தது' என்று கிலி பிடித்தான்
முதுகிலாத முதலமைச்சன் கெஞ்சி!



செருக்கினாலே குடும்பத்தினை மறந்தான்
செம்மைதரு கல்வியினைத் துறந்தான்;
அருவருக்கும் அரசியலில்
ஆருக்கென்ன தெரியும் என்றான்
தெரிந்தெடுத்தார் அமைச்சனாகச் சிறந்தான்.



மனத்தினையே விற்றுவிட்டான் சேந்தன்
மாண்புக்கெல்லாம் அடிபிடித்தான் மாந்தன்!
இனத்தைக் காட்டிக் கொடுத்து விட்டான்
இழிவுக் கெல்லாம் பாய் விரித்தான்
இன்று கல்விக் கழகத்துணை வேந்தன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/32&oldid=1200871" இலிருந்து மீள்விக்கப்பட்டது