பக்கம்:குறும்பா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

33


தற்பெருமைப் பாட்டுக்களை நுழைத்தான்
தற்செருக்கை நாடகத்தில் அழைத்தான்,
தற்புகழை எழுத்தில், பேச்சில்
தாளிகையில் தந்து வந்தான்
தப்பானவர் தாம் புகழப் பிழைத்தான்!



தாக்கிற்றுநோய் உடன் இறந்தது அரிமா,
தலை இழந்தும் உயிர் வாழ்கிறதாம் நரிமா;
போக்கிலிகள் பொய்மை கூறிப்
புட்டரசுத் தேர்தலிலே
நோய்க்கிரைத்தார் கோடிபணம் பொரிமா!



கூண்டுக்கிளி பறந்துவிட்டது வானில்
கொண்டாட்டம்தான் காதலுற்றது தேனில்!
கூண்டின் வெறுமை கண்டு பரத்தை
கோட்டான் ஒன்றை அடைத்து வைத்தாள்
மாண்பு வந்து மகிழ்வடைந்தான் ஊனில்!



மானின் விழி அழகை எண்ணி சிறுத்தை
மாற்றிடுமா கொல்லுகிற கருத்தை?
வான்வில் வண்ணக் கிளி மரத்தில்
வந்தமர்ந்தால் திருட்டுப்பூனை
தான் மகிழுமா புரட்சியின் எழில் குருத்தை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/36&oldid=1200939" இலிருந்து மீள்விக்கப்பட்டது