பக்கம்:குறும்பா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கோவேந்தன்


உலகத்தினும் உயர்ந்த நூல் ஒன்றில்லை
ஓதவேண்டும் என்ற அறிஞன் சொல்லை,
கலகக்காரர் கேட்கவில்லை
கருத்து முதல் வாதிகளின்
இலக்கியத்தால் விளைந்ததுவே தொல்லை!



நோய்கள் தின்று, நாறும் சாவு வேண்டேன்
நொடியில் வரும் பகை இறப்பைத் தூண்டேன்;
போய் அரசுச் செலவினிலே
பொய்உயிராய் வாழ்வதினும்
சூழ்புலிகள் நூறுவரக் காண்பேன்!



சமயம் எனும் சதுப்பு நிலத்தூடு
சாதிமதக் கருத்துக்களாம் பூடு
தமதுழைப்பால் விளைந்ததென்று
தாம் மகிழ்வார் பூரியர்கள்;
சமன்மை விரும்பும் மக்கட்குமுட் காடு!



நாட்டுப்பற்றை முதலிலேயே மறந்தான்
நவிலும் மொழிப் பற்றினையும் துறந்தான்
நாட்டமைச்சாய் இருப்பதற்குக்
காட்டிக் கொடுத்து வாழலுற்றான்
நாட்டு மக்கள் விழிக்குத்தப்பி இறந்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/39&oldid=1201028" இலிருந்து மீள்விக்கப்பட்டது