பக்கம்:குறும்பா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

41


2


வேதகால முனி ஒருவன் வந்தான்
விந்துபல ஊறிய இந்துவோ உவந்தான்.
ஓதுபல சாத்திரம், சுருதி,
உபநிடதம், புராணம், கீதை தந்தான்.
வேதமுனி ஏதும் காணான்
விட்டால் போதும் என்றுசொல்லிப் பறந்தான்!



இந்துமகள் என்றொருத்தி சொன்னாள்
எண்ணரிய நோய்க்கிடமாய் நின்றாள்;
எந்தவிதம் இத்தனை நோய்
வந்ததென்று கேட்கையிலே, புண்ணாள்
முந்துபல நூற்றாண்டாக
வாழவேண்டி முனைந்ததினால் என்றாள்:



செத்த மொழிச் சொற்கள்பல நூறு,
சேர்த்தமைத்த பாடல்மணல் ஆறு;
மெத்தக் குதித்து இன்னிசையில்
மிதந்து செல்வேன் என்று பல வாறு
கத்திக்கத்திப் பாடினான் பின்
கால்கள் பட்ட இடமோ பழஞ் சேறு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/44&oldid=1201071" இலிருந்து மீள்விக்கப்பட்டது