பக்கம்:குறும்பா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

கோவேத்தன்


ரண்டு கோடி பரிசக்காக ஏங்கி,
ஈராயிரம் கொண்டிருபதுாரில் வாங்கி,
திரண்ட பரிசு தனக்கெனவே
திளைத்திருந்தான், பரிசு விழுந்தது தேங்கி;
மிரண்டிடாமல் வாங்கிவிட்டான்
மீண்டுவிட்டது கள்ளச்சீட்டென்று ஓங்கி!

o

ரார் வீட்டுத் திருமணத்தில் விருப்பு;

உண்ணுவதில் முந்தியவர் இருப்பு;
நேராகப் பின் வாழ்த்திவிட்டு
நிற்கமாட்டார் பொழுது போக்கில் வெறுப்பு.
பாராதீர் நீர் பழசைவிட்டுப்
புதுகை கொள்ளும் கால்களிலே செருப்பு!

o

ராமலிங்கர்;அடிகளவர் பேரால்
இருந்த கடை, கூட்டங்கண்டேன் நேராய்;
பராவி வழி பாட்டுடனே
பத்தர்களே நிறைந்தார் எனச் சீராய்த்
துழாவிச் சென்றேன் அருட்பாக் கூட்டத்
தொண்டர்களே இறைச்சிக்கடை பாராய்!

o

ண்டு ஒன்றைக் கொண்டுவந்தார் நாட்டார்; 'நாள், கிழமை தெரிவதில்லை' வீட்டார்.
எண்டிசையும் வியக்க இதை
நேராய் நடக்கச் செய்வேன் என்று போட்டார்.
கண்டவர்கள் சிரிக்கப் பெரும்

கள்ளுண்டான்போல் குறுக்க நடக்கப் பார்த்தார்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/45&oldid=1199722" இலிருந்து மீள்விக்கப்பட்டது