பக்கம்:குறும்பா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

43


’நடப்பதினும் இருப்பதுவே இன்பம்:
இருப்பதினும் படுப்பதுவே இன்பம்;
கிடந்திருந்து விழிப்பதிலும்
கிறங்கி நன்கு உறங்குவதோ இன்பம்’
மடப்பயலே சிறந்ததொன்று
மடிவதுவே மண்ணினில்பே ரின்பம்!



‘எழுந்துவந்தால் உடைத்திடுவேன் பல்லை;
என்னிடத்தில் காட்டேல் வீரச் சொல்லை;
விழுந்திடுவாய் சென்றிடு’ என்று
வீரமணி எடுக்கப் போனான் கல்லை;
அழுந்தக் குந்தி இருந்தவனை
அள்ளப் போனேன் அவற்குக் கால்கள் இல்லை. .



மருத்துவப் படிப்புக்கு இடம் தேடி
கண்டி இட்டான் அமைச்சரிடம் பாடி;
மறுத்து விட்டார்; ஆனால் அவர்
மயிர்ச்சடை நாய்க்கு இட்டான் இறைச்சி; ஓடித்
திரும்புகையில் பணப்பை இல்லை...
சேரும்படி ஆணை வந்தது நாடி!



பத்து காசைப் பாதையிலே கண்டான்,
பாதம் வைத்து நண்பனைச் செல் என்றான்.
ஒத்த நண்பன் சென்றபின்னர்
அக்கம் பக்கம் உற்றுப் பார்த்துக் கொண்டான்;
பத்துகாசைக் குனிந்தெடுத்தான்
சட்டைப் பையில் புதிய ஓட்டை கண்டான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/46&oldid=1201075" இலிருந்து மீள்விக்கப்பட்டது