பக்கம்:குறும்பா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

45

தாய்மொழிக்கே முதன்மை என்றான் செழியன்
சட்ட மன்றிலும் தீர்மானித்தான் விழியன்:
போய்ப் பார்த்தால் அமைச்சர், மன்றோர்
புதல்வரெலாம் அயல்மொழியின் வழியர்
ஏழை மக்களை ஏமாற்றியே
இங்குயர்ந்தார் ஆளவந்த பழியர்!



கடவுள்சிலை கண்டு மகன் வணங்கான்
கடவுளையே வடிப்பது என்றன் மகன்தான்;
உடலுழைப்பே இலாதவர்கள்
உன்னை என்னை ஏமாற்றிடும் குணத்தார்,
கடவுள் என்று சொல்லித்திரிவர்
கடவுள் பேரால் சுரண்டல் எல்லாம் பணந்தான்!



'குடிப்பதனால் குடி குடியைக் கெடுக்கும்’
குறித்த பலகை கடைகள் தோறும் கிடக்கும்;
குடி கெடுக்கும் மது வகையைக்
கோடிப் பண ஏலத்திலே கொடுக்கும்
குடியரசில் ஆளவந்தார்
குடிக்க வகை செய்துயிரை எடுக்கும்!



காக்கையை ஏன் சனியன் என்று சொன்னர்?
காளிமுத்துவைக் கேட்டு விட்டார் மன்னார்;
‘போக்கிலிலே போடா போயிக்
கோயில்புறா ஏறிப் பிடி’ என்றார்.
போக்கறிந்தான், புரிந்து கொண்டான்
காக்காய்கறி சனைத்து எவரும் தின்னார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/48&oldid=1201090" இலிருந்து மீள்விக்கப்பட்டது