பக்கம்:குறும்பா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

கோவேந்தன்


கரடி கிழமானது வயது எட்டிக்
கண்டது பேரப்பிள்ளைத் தன்னைச் சுற்றி,
புரட்டி ஆடி மகிழ்ந்திருந்தது.
‘புட்டபர்த்தி’ தலைபோல் முடி பற்றி
உரமற்ற கிழக் கரடியினை
உலுக்கி விளையாடியது குட்டி!



நோய்க்கிரண்டு வைப்பாட்டி மார்கள்
நூறு வயதும் ஆளை விழுங்குவார்கள்;
தாய்க்கிழவி சமைத்ததெலாம்
தனியா துண்டு நன்கு கொழுப்பார்கள்;
போய் அனைத்துப் பொருள் பறித்துப்
புத்துணர்ச்சி தந்து களிப்பார்கள்!



திரைப்படத்து விளம்பரங்கள் தெருவில்
திரெளபதியைத் துகிலுரித்த உருவில்!
பரத்தையரும் கூசுகின்ற
படங்கள் கண்டார் கலையமைச்சர் அருகில்;
உரைக்கவொணா மகிழ்வில் ஆழ்ந்தார்
உந்து வண்டி மோதி விழுந்தார் சருகில்!



ஒவ்வொரு நோய்க்கும் மருத்துவர்பால் ஒடி
மருந்துண்பான் தெரிந்த புண்ய கோடி.
ஒவ்வொரு வழக்கும் முற்றவிட்டு
வழக்குரைஞர் பற்பலரைத் தேடி
எவ்வளவோ பொருள் இழந்தான்
இன்றடங்கி விட்டான் உயிர் நாடி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/55&oldid=1195863" இலிருந்து மீள்விக்கப்பட்டது