பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


கோட்டை அடைவதற்கு முன் எத்தனை போர்களைத் தொட்டு அவுட்டாக்குகிறார்கள் என்பது தான் விளையாட்டு.

ஆக, இந்தப் பெயரைச் சொல்வதற்கு முன், ஆசிரியர் மிக சத்தமாக, ராகம் போடுவது போல ஆ என்று தொடங்கி, மீண்டும் 'ஆ' என்று கூவி, னை என்றோ, மை என்றோ கூறலாம்.

ஆனை என்று கூறிவிட்டால், ஆனைக்குழுவினர், தமக்குப் பின்புறம் உள்ள 40 அடிக் கோட்டை நோக்கி ஓட வேண்டும்.

ஆமைக் குழுவினர், ஓடுபவர்களை ஓடிப்போய் தொடரவேண்டும். தொடப்பட்டவர்கள் எல்லோரும், ஆமைக் குழுவில் போய் சேர்ந்து கொள்ள, ஆட்டம் தொடரும்.

இதுபோல 5 முறை ஓடச் செய்யலாம். 5 ஓட்டங்களுக்குப் பிறகு, அதிகமான ஆட்டக்காரர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கும் குழுவே வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்படும்.

4.6 சங்கிலித் தொடர் ஆட்டம் (Chain Tag)

விரட்டித் தொடுபவரை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். விளையாட்டுக் காரர்கள் எல்லோரும் மைதானம் முழுவதும் பரவி நின்று கொண்டிருக்க வேண்டும்.