பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

9



1. உடற்கல்வியும் ஒரு கல்வியே!

முதன்மையும் முக்கியமும்

இந்திய நாட்டின் கலாசாரத்தில், மரபுகளில், பழக்க வழக்கங்களில், உடற்கல்வி ஒரு முக்கியமான இடத்தையே வகித்து வந்திருக்கிறது. வகித்தும் வருகிறது.

வரலாறுக்கு முற்பட்ட காலத்தலிருந்தே, உடற்கல்வியும், உடல் இயக்கப் பழக்க வழக்கங்களும், இந்தியர்களின் வாழ்க்கையில், வாழ்வோடு வாழ்வாகவே, பின்னிப் பிணைந்து இருந்தன. இருக்கின்றன. இனியும் இருக்கும்.

ஆகவே, உடற்கல்வி என்பது, நம் நாட்டிற்குப் புதிதல்ல... நமக்கு புதிதல்ல.

என்றாலும், பல்வேறு சூழ்நிலைகள், பலம் கொடுக்கின்ற பாதைகளை மறித்த இக்கட்டான பாழ்நிலைகள் எல்லாம், நமது பாரம்பரியத்தை, சற்றே திசை மாற்றித்