பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

111


இன்னொருவர், அவரது இரண்டு கால்களையும் தூக்கிப் பிடித்துக்கொள்ள, கீழே இருப்பவர், இப்போது இரண்டு கைகளையும் ஊன்றியபடி நிற்க வேண்டும்.

உடனே, முதுகுப்பகுதியை நேராக வைத்துக் கொண்டு, கைகளால் முன்னோக்கி நடந்து செல்ல வேண்டும்.

கால்களைப் பிடித்திருப்பவர், நீட்டமாகக் கால்களைப் பிடித்துக்கொண்டு, முன்புறமாக நடத்திப் போகவும்.

குறிப்பு : ஒற்றைச் சக்கர வண்டிக்குக் கைப்பிடி இருக்கும். அதைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போவது போல, இந்த சாகசச் செயலைச் செய்திட வேண்டும்.

6. தனிப்போர் விளையாட்டுக்கள் (Simple Combatives)

6.1. கைப்பிடி யுத்தம் (Hand wrestle)

இரண்டு போராளிகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பேரும் அருகருகே வந்து நின்று, வலது காலை முன்புறமாக வைத்துக் கொண்டு, வலது கையினால் ஒருவர் கையை ஒருவர் நன்றாகப் பற்றிக்கொண்டு நிற்க வேண்டும்.