பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


(படத்தில் உள்ளது போலவும் செய்யலாம்.)

இடதுகையை முதுகுப் புறத்தில் இருவரும் வைத்துக் கொள்ள வேண்டும்.

சண்டை போடுங்கள் என்று சொன்னவுடன், ஒருவரை ஒருவர் வலது கையைப் பற்றிய படியே இழுத்து, தள்ளி, திருப்பி, சுழற்றி அடுத்தவரை சமநிலை இழக்கச் செய்துவிட வேண்டும். அல்லது அவள் தரையில் ஊன்றி யிருக்கும் ஏதாவது ஒரு காலை இடம் பெயரச் செய்துவிட வேண்டும்.

இந்தச் சண்டையில், வலது கையை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இடது கையை பயன் படுத்தவே கூடாது.

கால்கள் சமநிலை இல்லாமல் கீழே விழுந்தாலோ, அல்லது கால்களை நகர்த்தி விட்டாலோ, அப்படிச் செய்தவர் தோற்றவராகிறார்.

வலது கைப்பிடியில் வழுக்கல் நேர்ந்தால், மீண்டும் கையைப் பற்றி சண்டையைத் தொடரவேண்டும்.

6.2. பெஞ்சின் மேல் சண்டை (Push off the Bench)

இரண்டு எதிராளிகளும், ஒரு பெஞ்சின் மேல் ஏறி நின்று கொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் பார்த்தபடி