பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

113


நின்று கொண்டு, 2 அடி நீளமுள்ள சிறிய கைத்தடி ஒன்றையும், இருவரும் உறுதியாகப் பற்றியபடி நிற்க சண்டை தொடரும்.

சைகை கொடுத்த பிறகு, இருவரும் கையில் பிடித்துள்ள கைத்தடியைப் பற்றியபடி, எதிராளியை முன்புறமாக இழுக்கலாம். பின்புறமாகத் தள்ளலாம். எதிராளியை சுழற்றி, குழப்பி, அவரை பெஞ்சிலிருந்து கீழே தள்ளி விட வேண்டும்.

பெஞ்சின் மேல் நின்று சண்டை போட முடியாமல், கீழே தள்ளப்படுகிறவர், சண்டையில் தோற்றவராகிறார்.

6.3. முக்காலியின் மேல் சண்டை (Push off the Stool)

இரண்டு எதிராளிகள் ஆளுக்கு ஒரு முக்காலியின் மேல் நின்று கொள்ள வேண்டும். இரண்டு முக்காலிகளுக்கும் அடையில், குறைந்தது 2 அல்லது 3 அடி தூரம் இருப்பது போல் வைத்துக் கொள்ளலாம்.

ஒரு நீண்ட தடியை ஆளுக்கு ஒரு முனையில் படித்துக் கொண்டிருக்க, சண்டை ஆரம்பமாகிறது.

சண்டையிடுங்கள் என்று சைகை கொடுத்தவுடன், முனை ஒன்றைப் பிடித்துக் கொண்டிருக்கிற எதிராளி இருவரும், தடியை முன்னுக்குத் தள்ள, பின்னுக்கு இழுக்க, தடியை சுற்ற, சுழற்ற - இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து,