பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


அவரை முக்காலியிலிருந்து தரைக்குப் போகுமாறு தள்ளிவிட வேண்டும்.

6.4. முட்டியைத் தட்டு (Knee Slap)

போட்டியிடும் எதிராளி இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்கவும்.

தொடங்குங்கள் என்று சைகை கிடைத்தவுடன், எதிராளியின் முட்டியை (முழங்காலை) தன் வலது கையால் தட்ட வேண்டும். இது தான் ஆட்டத்தின் நோக்கம்.

தான் அடுத்தவர் முட்டியைத் தட்ட வேண்டும். ஆனால் தன் முட்டியை அடுத்தவர் தொட்டு விடக்கூடாது. இப்படி தன்னைக் காத்துக்கொண்டு, அடுத்தவர் முட்டியை முதலில் தட்டி விடுகிறவர், வெற்றி பெற்றவராகிறார்.

இதற்காக இருவரும் சுற்றிச் சுற்றி வரலாம். ஆனால், உடலைக் கட்டிப் பிடித்துக் கொள்ளக் கூடாது. எதிரியை ஏமாற்ற எப்படி வேண்டுமானாலும் தந்திரங்கள் பலவற்றை மேற் கொள்ளலாம்.

6.5. பாதங்களில் நின்று சண்டை (Stepping on Toes)

போரிடும் இரண்டு பேரும், தங்கள் முன் பாதங்களில் நிற்க வேண்டும். வலது கையை தலைக்கு மேலே உயர்த்தி, இருவரும் வலது கையைப் பற்றிய படி இருக்கையில், சண்டை ஆரம்பமாகிறது.