பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


7.1.2. குடிநீர்க் குழாய் அருகிலோ அல்லது குடிநீர் வழங்கும் தொட்டியின் கீழோ, குளிக்கின்ற பழக்கம், தவறானது. துணி துவைக்கின்ற வேலைகள் எதையும் அங்கு செய்யவே கூடாது. அந்த இடத்தில் தண்ணீரைத் தேங்கவிட்டு, சாக்கடையாய் மாற்றி விடவும் கூடாது.

7.1.3. சிறுநீர் கழிப்பதாக இருந்தாலும், மலம் கழிப்பதாக இருந்தாலும், அதற்காக ஒதுக்கப்பட்ட கழிப்பறைக்குத் தான் செல்ல வேண்டும். தடுப்பதற்கு யாருமில்லை என்று, நினைத்த இடத்தில் ஒதுங்குவது தவறு. பொது இடத்தைத் தமது வீடு போல, சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற நினைவுடன் தான் நடந்து கொள்ள வேண்டும்.

7.1.4. கழிப்பறைகள் எதுவும் இல்லாத போது, குடிநீர் இருக்குமிடத்தில், அல்லது, நீர் நிலை ஓரங்களில் மலஜலம் கழிக்கக் கூடாது. அதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.

7.1.5 எந்த வேலையைச் செய்தாலும், செய்து முடித்த பிறகு கை, கால், முகம் முதலியவற்றை நன்றாகக் கழுவிய பிறகே, சாப்பிடச் செல்ல வேண்டும். உடையில் துடைத்துக் கொண்டால் உறுப்புக்கள் தூய்மையடைந்து விடாது.

7.2. உணவுண்ணும் பழக்கம்

7.2.1. சரியான நேரத்தில், எப்பொழுதும் குறிப்பிட்ட