பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்


களைப்புடன் கவடிடப்படாமல், உடல் நலமாகத் திகழ்வது போல விளையாட வேண்டும்.

7.3.5. ஓய்வு மிகவும் அவசியம், உறக்கம் அதற்கு உதவும். நன்றாகக் காற்றோட்டமுள்ள இடத்தில் உறங்குவது நல்லது. இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு உறங்குவதும், முகத்தை முடிக் கொண்டு தூங்குவதும் நல்ல பழக்கம் அல்ல.

7.3.6. உடல் நலத்திற்காக பள்ளிகளில் தடுப்பு ஊசி மருந்துகள் போன்றவைகளை தருகின்ற சமயங்களில் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது உடல் நலத்தை மேலும் உயர்விக்கும்.

7.3.7. உடல் நலப் பழக்கங்களை அலட்சியம் செய்யாமல் நமக்கு தேவை அவை என்ற நன்னோக்கோடு அனுசரித்துக் கடைபிடிக்கும் போதுதான், நலமான வாழ்வு. நிறைவோடு கிடைக்கும்.

7.4. பாதுகாப்பு பழக்கம்:

7.4.1 துன்பம் விளைவிக்கின்ற பிராணிகளுடன் விளையாடக் கூடாது.

7.4.2. நெருப்புடன் விளையாடக் கூடாது. ஆழமான நீர்ப்பகுதிகளில் போய் நீந்தக் கூடாது. கிணற்றில் இறங்கிப் பார்க்கிறேன் என்ற விஷமத்தனமாக முயற்சியில் இறங்கக்