12
டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா
விடுவது, உணர்வுகளை ஒரு சீராக்கி, நேராக்கி, நேரிய பாதையில் நடத்த விடுவது. நடத்தி விடுவதாகவும் அது அமைந்திருக்கிறது.
அதையே நாம் உடற்கல்வி உடலை கூராக்குகிறது. வாழ்வை சீராக்குகிறது என்று கூறலாம்.
இனி, உடற்கல்வியானது, குழந்தைகளின் நல்ல வாழ்வுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.
1. 1. உடல் நலம், நிமிர்ந்து நிற்கும் அழகான தோரணை; செம்மாந்த நடை, இந்த இனிய நிலையை ஏற்படுத்தி, செழுமைப் படுத்துகிறது.
1. 2. உடல் தரத்தை, திறத்தை அதிகப்படுத்துகிறது.
1. 3. குழந்தைகள் தங்களுடைய இதமான நடைமுறைகளையும், எழிலாகச் செய்கிற செயல் முறைகளையும், விரும்பியவாறு மேன்மையுடன் செய்து கொண்டு, சந்தோஷப்பட உதவுகிறது.
1. 4. உணவு உண்ணும் முறையில், உறங்கும் முறையில், உடற்பயிற்சி முறையில், சுகாதாரமான பழக்க வழக்கங்களை உண்டாக்குகிறது.
1. 5. குழந்தைகள் தங்களுக்குரிய உடல் குறைகளை (Defects) உணரச் செய்து, அவற்றை நிவர்த்திக்கின்ற முறைகளைக் கற்றுக் கொண்டு நிவாரணம் பெற உதவுகிறது.