பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

145


ஓட்டத் தொடக்கம் : (Start)

மூன்று விதமான தொடக்க நிலைகளை இந்தப் படத்தில் பாருங்கள். முதல் படம் உங்களுக்கு நன்றாக உதவும்.

உங்களிடத்தில் நில்லுங்கள் : (On Your Marks)

குனிந்து கோட்டிற்கு முன்னே நின்று, தோள்கள் அகல அளவில் கைகளை வைத்து, விரல்களை விரித்து நிற்பது.