குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்
13
1. 6. தங்களுக்குரிய திறமைகளைப் புரிந்து கொண்டு, தடுத்து நிற்கும் குறைகளைத் தவிர்த்துக்கொண்டு, நரம்பும் தசைகளும் இணைந்து செயல்படுத்தும் காரியங்களை, நல்ல விதமாகக் கற்றுத்தருகிறது.
1. 7. குழந்தைகளுக்கு இடையே கொப்புளித்து எழும்புகிற குழு ஒற்றுமை, கூட்டுணர்வுப் பண்பு, நீதி நியாயம் அறிந்து நடந்து கொள்கிற நேர்மைப் பண்பு, நல்ல விளையாட்டுக் குணங்கள், போன்ற குணங்களை, வளர்த்து விடுகிறது.
1. 8. கூடிப் பழகும் குணங்களுக்கு அடிப்படையாக உள்ள தனிப்பட்ட குணங்களான, அடக்கம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டு உணர்வு, வீரம், தியாகம், மற்றவர்களை மதித்தல், தன்னம்பிக்கை போன்றவற்றையும் மிகுதியாக வளர்த்து விடுகிறது.
1. 9. தமது பொறுப்புணர்தல்; கடமைகளைப் புரிந்து கொள்ளுதல்; சுய பலம் அறிதல்; சில தியாகங்களை மேற்கொள்ள முயலுதல்; பிறருக்கு உதவுதல், வழிகாட்டுதல், போன்ற உயர்ந்த குணங்களை வளர்த்து விடுகிறது.
1. 10. சதா காலமும் நினைத்த இடமெல்லாம் அலைந்து திரிந்து களைத்துப் போய்விடாமல், ஓய்வு நேரத்தை ஒழுங்கான முறையில் அனுபவித்தல், அதன் மூலம் உற்சாகம் பெறுதல்; தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உதவியாக வாழுதல் போன்ற பண்பாற்றல்களைப் பெருக்கி விடுகிறது.