இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா
1. 11 திடமான குழந்தைகளே , தரமான குடிமக்களாக உருவாக முடியும். தன்னைக் காத்துக் கொள்ளத் தெரிந்த குழந்தைகளே, தகுதியுள்ள மக்களாகவும், தலைவர்களாகவும் பிற்காலத்தில் விளங்க முடியும். அப்படிப்பட்ட வாழ்வுக்குரிய தற்காப்பு உணர்வுடன், தற்காப்புக்கலைகளைக் கற்றுக்கொள்ளவும் துணைபுரிகிறது.
1. 12. இப்படிப்பட்ட ஏற்றமிகு குணாதிசயங்களை வளர்த்துவிட்டு, வீட்டிற்கும், நாட்டிற்கும் வளமான பணியாற்றுகிற வாய்ப்பு, வசதிகளை அளித்து, பலமிக்கத் தாய் நாட்டை, புகழ்மிக்கதாகவும் உருவாக்கி வரும் மேன்மையை வழங்குகிறது.