பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

173



 
9. வேடிக்கையான விநோத நடைகள் (Novelty Walks)


மனிதர்கள் நடப்பது போன்ற நடையைத் தவிர்த்து, மிருகங்கள் போல் நடக்கின்ற விநோத நடை, வித்தியாசமான நடை, வேடிக்கை ஊட்டுகின்ற சாகச நடைகள் சிலவற்றை, இங்கே கொடுத்திருக்கிறோம்.

செய்து பார்க்கும்போது சிரமமாகத் தோன்றினாலும், செய்யும் குழந்தைகளுக்கு சிந்தையில் மகிழ்ச்சியும், செயலில் தெம்பையும் தரக் கூடியனவாக அமைந்திருக்கும்.

பொறுமையாக, திறமையாக செய்து பார்த்து மகிழவும்.

சில நடைகள் :

1. பூனை நடை

2. யானை நடை