பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


2. 4. உடல் நலம் பற்றி மேற்கொள்கிற பரிசோதனைகளில் பங்கெடுத்துக் கொண்டு, உடலில் உள்ள நோய்களையும் குறைகளையும் கண்டறிந்து, ஆவன செய்யும் அறிவையும், அனுபவத்தையும் கொடுக்கிறது.

2. 5. நிமிர்ந்து நிற்க வேண்டும், நிமிர்ந்து நடக்க வேண்டும். நிமிர்ந்து உட்கார வேண்டும் என்கிற நினைப்புடன் இருக்கச்செய்து, உயர்ந்த நிலையில் உலா வரச் செய்கிறது.

அத்துடன், உடலில் ஏற்படும் குறைகளை அறிந்து, அவற்றிற்கேற்ப உடற்பயிற்சிகளைச் செய்து, குறைபோக்கும் காரியங்களைச் செய்யும் கருத்தினை வளர்த்து விடுகிறது.

2. 6. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பழக, அனுசரித்து நடந்து கொள்ள வாய்ப்புக்களை வழங்கி, அனுபவங்களை ஏற்படுத்தி, விளையாடி மகிழும்போது, சமூக உறவு பற்றி புரிந்து கொள்ளவும் துணை செய்கிறது.

2. 7. சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும்; உணவு குறைந்தால் உண்டாகும் நோய்கள் பற்றியும் புரிந்து கொண்டு சாப்பிடும் பழக்க வழக்கங்களை சரியாக அனுசரித்து நடந்து கொள்ள உதவி செய்கிறது.