பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

17


2. 8. தன் கடமை, தன் செயல், தன் உழைப்பு இவற்றைப் புரிந்து கொண்டு, தன்னம்பிக்கையுடன் நடந்து கொள்ள உதவுகிறது.

2. 9. உடல் சக்தியினை வளர்த்துக் கொள்வதுடன், உடலியக்கத்தின் மூலம் தன்னிறைவும், மன திருப்தியும் பெற்றுக்கொள்ள உதவுகிறது. மன திருப்தியும் மகிழ்ச்சியுமே உடற்கல்வி அளிக்கும் பேரின்பமாகும்.

2. 10. தனது திறமைகளை மற்றவர் பாராட்டுகிற போது ஏற்படுகிற மகிழ்ச்சியை உணர்ந்து கொண்டு, மற்றவர்களைத் தானும் பாராட்ட வேண்டும் என்ற பெருந்தன்மையும் , மனப் பக்குவமும் ஏற்படுகிற சூழ்நிலைகளை ஏற்படுத்தி, பண்பாற்றலை பெருக்கி வைக்கிறது.

2. 11. நல்ல பார்வையாளர்களாக குழந்தைகளை உருவாக்குகிறது.

2. 12. சிந்தித்துக் காரியமாற்றும் சிறந்த செயல் ஊக்கம் தருவதுடன், கற்பனை நயம் மிளிரக் காரிய மாற்றும் வல்லமையையும் வளர்த்து விடுகிறது.

2. 13. ஒருவருக்குத் தன்னம்பிக்கை, வலிமை மட்டும் வளர்ந்தால் போதுமா? விபத்து நேராமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும்; மீறி ஏதாவது நடந்துவிட்டால், மனம் கலங்கிப் போகாமல், முதலுதவி செய்து கொண்டு,