பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


1. விநோத நடை (Novelty Walk)

இடுப்பின் இருபுறமும் கைகளைப் பதித்துக் கொண்டு, முதலில் நிற்க வேண்டும். பிறகு, வலது காலை எடுத்து இடது காலை சுற்றிக் கொண்டு வந்து எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் இடது காலின் முன்புறத்தில் வைத்து நிற்கவும். இப்பொழுது வலது கால் முன்பும் இருப்பது போல வைத்து, இடது காலை நகர்த்தியவாறு நடக்க வேண்டும். பின்னியுள்ள கால்களைப் பிரிக்காமல், தோள்களை நிமிர்த்திக் கொண்டு முன்னோக்கி நேராக நடந்து செல்ல வேண்டும். இதுவே விநோத நடையாகும்