பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

197


6. எளிதாகத் தூக்கு (Free Feat)

முதலில் நிமிர்ந்து, விறைப்புடன் நிற்க வேண்டும். பிறகு கட்டை விரல்களாலும் ஆட்காட்டி விரல்களாலும் (அதாவது) இரு கைகளைக் கொண்டு நெற்றிப் பொட்டை (Temples) அழுத்திப் பிடித்துக்கொண்டு, முழங்கைகள் உடலை ஒட்டி இருப்பது போல இறுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பாங்கராக உள்ள (Partner)ஒருவரை விட்டு முழங்கையுடன் அப்படியே மேலே தூக்கச் செய்ய வேண்டும்.