பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

199


இயற்கையாக நடக்கின்ற செயல்களாகும்.(Movement) இதனால் உடல் பலம் அடைவதில்லை.

வேலை என்பது உடல் உறுப்புக்களால் நடைபெறுவது தான். ஆனால், அது உடலை பலப்படுத்தும் செயல் அல்ல, வேலையானது உடலைப் பயன்படுத்தி, பொருள் சம்பாதிக்கும் நோக்கத்துடன் செய்வதாகும்.

உடற்பயிற்சி என்பது உடலுக்காக, உடல் உறுப்புக்களைப் பயன்படுத்தி உழைக்கச்செய்து, உடல் வளமாக வளரவும், நலமாக மிளிரவும் உதவுவதாகும்.

உடற்பயிற்சி செய்வது என்றால், உடல் உறுப்புக்களை இயக்குகிற பொழுதே, நன்றாக உயிர்க்காற்றை உள்ளுக்குள் இழுத்து, நுரையீரலை நிரப்பி, பிறகு வெளியே விடுகின்ற செயல் முறையாகும்.

அதாவது, உயிர்காற்றை நிறைய சுவாசித்து உள்ளே அடக்கி, பிறகு வெளியே விடுவது.

இதனால் என்ன பயன் கிடைக்கும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்காக, முதலில் உடல் அமைப்பை ஆராயலாம்.

நமது உடல் செல்களால் (Cell) ஆனது. செல்கள் தான் உடலின் ஆதாரமான அடிப் பொருளாகும்.