உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

201


தண்ணீர் பெற்ற பயிர்கள் செழித்து வளர்வது போல, உயிர்க்காற்று கலந்த இரத்தம் பெற்ற செல்கள் செழித்து வளர்கின்றன.

அதனால்தான் உடற்பயிற்சி செய்த உடலானது வளர்ச்சியும், எழுச்சியும், மலர்ச்சியும் நிறைந்ததாக விளங்குகிறது. மகிமை பெறுகிறது.

உடற்பயிற்சி செய்வதனால் உண்டாகும் பயன்களை இனி நாம் தொகுத்து காண்போம்.

உடற்பயிற்சி செய்கின்ற ஒருவரும், உடற்பயிற்சி செய்யாத ஒருவரும், ஒரே மாதிரி உயரம், எடை, உடல் அமைப்பு கொண்டவராக விளங்கினாலும், அவர்களுக்கு உள்ளே நிறைய வேறுபாடுகள் உண்டு.

1. உடற்பயிற்சி செய்து வருபவருக்கு உடல் திறன், உடல் வலிமை, உடல் கட்டுப்பாடு நிறைய உண்டு:

2. இதயம் நன்கு வலிமை அடைவதால், இரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அதனால் உடல் முழுவதும் உள்ள செல்கள் பயன் பெற்று, பலம் பெறுகின்றன.

3. உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்கள், விரைவாக உடலை விட்டு வெளியேற்றப்படுவதால் உடல் தூய்மை அடைகிறது.