பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


4. உடலில் சிவப்பணுக்களும், வெள்ளை அணுக்களும் வலிமையானவைகளாக உற்பத்தியாவதால் உடலில் வலிவும், பொலிவும், தெளிவும் மிகுதியாகிறது.

5. ஆழந்து மூச்சிழுத்து, அதிகக் காற்றை சுவாசிப்பதால், அதிகமான ஆற்றலை உடல் வளர்த்துக் கொள்கிறது.

6. ஜீரண உறுப்புகள் பலமாகிவிடுவதால், உட்கொள்ளும் உணவை ரசித்து உண்ண முடிகிறது. நிறைய உண்ணவும், வாழ்வை வளமாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு பெருகுகிறது.

7. நாளமில்லா சுரப்பிகள் நல்ல திறம் பெறுவதால், உறுப்புகளுக்கு அதிகமான சக்தியும், ஆற்றலும் நிறைகின்றன.

8. கடினமான வேலைகளைக் கூட, எளிதாகச் செய்ய முடிகிற்து. சீக்கிரமாகவும் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் செய்ய முடிகிறது.

9. உடலில் தூய்மையும் சக்தியும் நிறைவதால், உடலுக்குத் தேவையான சக்தி, வலிமை, இரும்பொத்த நரம்புகள், கிளர்ந்தெழும் ஈரல், அயராதுழைக்கும் ஆற்றலுள்ள இருதயம், நீடித்து உழைக்கும் ஆற்றல், உறுப்புகளுக்கு இடையே ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த