பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

19



3. 6 முதல் 11 வயதுக் குழந்தைகள்

வயது 6 முதல் 11 வயது வரை பயிலும் மாணவ, மாணவியர் முதல் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரை படிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

அவர்களுக்கு அளிக்கப்படும் பாடத்திட்டமும், பயிற்சி முறைகளும், பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தி விடுவதாக அமைந்திட வேண்டும்.

நோக்கமும் நடைமுறையும் :

உடற்கல்விப் பாடத்திட்டத்தின் நோக்கமானது, மாணவ, மாணவியர்க்கு உடல் வளர்ச்சியை உண்டு பண்ண வேண்டும்.

உடலின் தசை வளர்ச்சியையும், தசையில் விசைச் சக்திகளையும் வளர்த்து விட வேண்டும்.

ஏனென்றால் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரின் தேக அமைப்பானது,