பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


கைகளை தோள் உயர அளவுக்கு மேலாக உயர்த்தினாலும், பார்ப்பதற்கு அருவெறுப்பாக இருப்பதுடன் செய்கின்ற பயறிசிக்குரிய பலன்களும் முறையாகக் கிடைக்காமல் போய்விடும்.

இடது கை நுனியிலிருந்து தோள்களின் அளவோடு வலதுகை நுனிவரை, ஒரு நேர்க்கோடு கிழித்தாற்போன்ற அளவு அமைவது போல உயர்த்தி, நிமர்ந்த நெஞ்சுடன் நிற்க வேண்டும்.

வற்புறுத்திக் கூறினாலொழிய, உள்ளங்கைகள் எப்பொழுதும் தரை பார்த்தே இருக்க வேண்டும்.

6. கைகளை தலைக்குமேல் உயர்த்து (Arms upward raise position)

கைகளை தலைக்கு மேலே உயர்த்தும் போது, உள்ளங்கைகள் இரண்டும் ஒன்றையொன்று பார்ப்பது போல வைத்துக்கொண்டு. கைகள் காதுகளை தொடுவது போல உரசிய தன்மையில் செல்வது போல உயர்த்த வேண்டும்.