பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

223


13)1. கழுத்தை விறைப்பாக வைத்து நில்

2.இயல்பாக இரு


14)1.கைகளை (நெஞ்சுக்கு முன்புறமாக நீட்டு

2.முழங்கால்களை முழுவதுமாக மடித்து, கைகளைக் கீழ்ப்புறமாக இறக்கி வந்து, பக்கவாட்டில் தரையை தொடு.


15)1.கைகளை முன்புறமாக நீட்டி பிறகு, தலைக்கு மேலே உயர்த்தும் போதே, கீழே இடது காலை பின்னால் வை.

2.கைகளை முன்புறமாகக் கொண்டு வந்து, கீழே இறக்கி, இடது காலை முன்போல் கொண்டு வந்து நில்.


16)1.கைகளைப் பக்கவாட்டில் விரித்துவைத்து முழங்கால்களை மடித்து உட்கார்.

2.கைகளைப் பக்கவாட்டிலிருந்து உயர்த்தி மடக்கித் தலையின் மேல் வை.

3.முன் மாதிரியே இரு