பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


21) பயிற்சியின் தொடக்க நிலை

கால்களை அகற்றி வைத்து, உள்ளங்கை மேல் நோக்கி இருப்பது போல, கைகளை பக்க வாட்டில் விரித்து வைத்து நில்.

1. முன்புறமாகக் குனிந்து விரித்து நீட்டியுள்ள வலது கையால், இடது கால் கட்டை விரலைத் தொடு,

2. இயல்பாக நிமிர்ந்து நில்

அதேபோல், கடைசி எண்ணிக்கை வரும் வரை குனிந்து, மாறிமாறி இடது கையால் வலது கால் கட்டைவிரலையும், வலது கையால் இடது கால் கட்டை விரலையும் தொட்டு, தொடர்ந்து பயிற்சி செய்யவும்.

22). இடுப்பில் கைகளை வைத்து நில்

1. இடது காலை முன்புறமாகத் துாக்கி வைத்திருக்க, வலது கால் கட்டை விரலை நன்கு தரையில் ஊன்றி, முழங்கால்களை விறைப்பாக வைத்து 4 எண்ணிக்கைக்கு நொண்டியடி (Hop).

2. 5 முதல் 8 எண்ணிக்கை வரை,