பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

231


32) 1. கைகளை பக்கவாட்டில் விரித்து, இரு கால்களையும் விரித்துக் குதித்து, இடது பக்கமாகத் திரும்பு (Twist)

2. இடுப்பினை வலது புறமாகத் திருப்பு.

3. இடுப்பினை முன் புறமாகத் திருப்பு.

4. முன் மாதிரியே இரு.


33) பயிற்சியின் தொடக்கத்தில், கைகளிரண்டையும் (கொக்கி போல) முன்புறமாகக் கோர்த்துக் கொண்டு, நில். (Clasp).

1. இடது காலை உயர்த்தி கோர்த்திருக்கும் கைகளுக்கிடையே (கைகளில் பிடி விடாமல்) நுழைத்து நில்

2. பிறகு, நுழைத்த காலை மறுபடியும் கொண்டு வா.

வலது காலை உயர்த்தி நுழை, பிறகு திரும்ப எடு. அவ்வாறு மாற்றி மாற்றி பயிற்சி செய்க.


(34) கைகளை தலைக்கு மேலே இருக்குமாறு உயர்த்தி,