பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


3. முதல் எண்ணிக்கை போல மார்புக்குக் கொண்டு வரவும்.

4. ஆரம்ப நிலைக்கு வரவும் (Starting Position).

2. 1. பக்கவாட்டில் கைகளை விரித்து, படுக்கைவாக்கில் (பக்க) கொடிகளை நீட்டி, இடது காலை இடது பக்கமாக எடுத்தபடி எடுத்து வைக்கவும்.

2. கைகளை தலைக்கு மேற்புறமாக உயர்த்தி கொடிகளை உயரவாக்கில் உயர்த்தி (Vertical) முன் பாதங்களில் நிற்கவும்.

3. முதல் எண்ணிக்கை போல.

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.

3. 1. பக்கவாட்டில் கைகளை விரித்து, படுக்கை வாக்கில் கொடிகளை நீட்டி, இடது காலை முன்பக்கமாக ஓரடி எடுத்து வைக்கவும்.

2. இடது காலை முன்பக்கமாக வளைத்து சாய்ந்து (Lunge), பக்கவாட்டில் இருக்கும் இடது கையை மேற்புறமாக உயர்த்தி, வலது கையைப் பக்கவாட்டில் கீழ்ப்புறமாகத் தாழ்த்தி, நிற்கவும்.

3. முதல் எண்ணிக்கை போல நிற்கவும்.

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.