பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


11. 1. முழுக்குந்தலாக உட்கார்ந்து, கொடிகளை பக்கவாட்டிற்குக் கொண்டு வந்து, தலைக்கு மேலே குறுக்காக வைக்கவும்.

2. கைகளை பக்கவாட்டில் விரித்து நீட்டி கொடிகளை பக்கவாட்டில் நீட்டவும்.

3. முதல் எண்ணிக்கை போல வரவும்.

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.

12. 1. இடது காலை ஓரடி முன்புறமாக எடுத்து வைத்து கொடிகளை பக்கவாட்டில் கொண்டு வந்து, தலைக்கு மேற்புறமாகப் பிடிக்கவும்.

2. வலது காலை ஓரடி முன்புறமாக இடது காலுக்கு நேராக எடுத்து வைத்து, வலது புறமாக சாய்ந்து பக்கவாட்டில் கைகளை விரித்து, கொடிகளை படுக்கை வாட்டில் பிடித்து நிற்கவும்.

3. முதல் எண்ணிக்கை போல கொண்டு வரவும்

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.

11.2. நாலடிக் கம்புப் பயிற்சிகள்(Wand Drills)

சிறு விளக்கம்

நாலடிக்கம்பு என்பது மூங்கில் கம்பாலான இலேசான